Advertisment

ஐபிஎல்-ல் விளையாடிய 'மின்வெட்டு'-மும்பையை வறுத்தெடுக்கும் மீம்ஸ்கள்!

ipl

'

ஐபிஎல் 2022' கிரிக்கெட் திருவிழா 10 அணிகளுடன் தொடங்கி மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபொழுது ஏற்பட்ட திடீர் மின்வெட்டும், அதனால் டி.ஆர்.எஸ் கேட்க முடியாமல் சென்னை வீரர் டெவோன் கான்வே ஆட்டமிழந்ததும் உலக அளவில் பேசுபொருளாகி இருக்கிறது.

Advertisment

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 59 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்கொண்டன. புள்ளி பட்டியலில் சென்னை அணிஅதலபாதாளத்தில் இருக்கும் நிலையில் இந்த போட்டி மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட்டது. இதில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. சென்னை அணியில் தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கிய நிலையில் 7 ரன்கள் எடுத்த ருதுராஜ், டேனியல் பந்துவீச்சில் கீப்பர் இஷன் கிஷானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Advertisment

அதேபோல் மற்றொரு தொடக்க வீரரான டெவான் கான்வே முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யு முறையில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த மொயின் அலியும் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ராபின் உத்தப்பாவும் எல்.பி.டபிள்யு முறையில் ஒரே ஒரு ரன் மட்டும்எடுத்து ஆட்டமிழக்க, நிலைகுலைந்து சென்னை. இந்த ஆட்டத்தில் கடைசி வரை நின்று ஆடிய சென்னை அணியின் கேப்டன் தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 36 ரன்களை எடுத்தார். 103 ரன்களை மும்பை இந்தியன்சுக்குஇலக்காக நிர்ணயித்தது சென்னை அணி.

அடுத்து களமிறங்கிய மும்பை அணி 15 வது ஓவரிலேயே 103 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே, டேனியல் சாம்ஸ் ஓவரில் முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தது செல்லாது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். டெவான் கான்வேவுக்கு நடுவர் அவுட் கொடுத்ததில் சந்தேகம் இருந்ததால் அவர், டி.ஆர்.எஸ். மூலம் மூன்றாவது நடுவரிடம் ரிவியூ கேட்க முற்பட்டார்.

'Electricity break' played in IPL-Mumbai roasting memes!

அந்த நேரத்தில் மைதானத்தில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் செயல்படவில்லை எனக்கூறி நடுவர் அளித்த தீர்ப்பே இறுதியானது என்று அறிவிக்கப்பட்டது. மின்வெட்டு காரணமாகவே சென்னை அணி தோற்றுவிட்டதாகக்கூறி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கடும்விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். அதுவும் மின்வெட்டு காரணமாகவே சென்னை தோற்றதாக குமுறும் ரசிகர்கள் மும்பை மின்வெட்டு தொடர்பான மீம்ஸ்களை வெளியிட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.

IPL
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe