/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ther554.jpg)
உயரழுத்த மின் கம்பியில் தேர் உரசியதில் மூன்று பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். ஒருவர் உடல் எரிந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் சீதா ராமர் கோயிலுக்கு சொந்தமான தேர், கடந்த ஏப்ரல் மாதம் ராமர்- நவமி விழாவின் போது, பயன்படுத்தப்பட்டது. கடந்த ஒரு மாதமாக மரத்தடியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு தேர், மழைக்காலத்தில் வீணாகிவிடும் என்பதால், அதனை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல முயன்றனர்.சிலர் கைகளால் தேரைத் தள்ள, சிலர் கயிறு மூலம் இழுத்துச் சென்றனர். அப்போது, மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து மூன்று பேர் உயிரிழந்தனர்; ஒருவர் காயமடைந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல், காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதேபோல், மின்கம்பியில் சப்பரம் உரசிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)