Electric vehicle sales triple in India

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை கடந்த நிதியாண்டில் மூன்று மடங்கு உயர்ந்திருப்பதாக வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisment

கடந்த 2021- 2022 ஆம் நிதியாண்டில் சுமார் 4,29,217 மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுவே கடந்த 2020- 2021 ஆம் நிதியாண்டில் 1,34,821 மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. இவற்றில் அதிகபட்சமாக இரு சக்கர வாகனங்களே விற்பனையாகியுள்ளன.

Advertisment

கடந்த ஆண்டில் 2,31,338 மின்சார இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. மின்சார இரு சக்கர வாகன விற்பனையில் ஹீரோ எலெக்ட்ரிக் முதலிடத்திலும், ஒக்கினாவோ இரண்டாமிடத்திலும், ஆம்பியர் வைக்கில்ஸ் மூன்றாமிடத்திலும், ஏசர் எனர்ஜி நான்காவது இடத்திலும் உள்ளன.

மின்சார நான்கு சக்கர வாகனங்களைப் பொறுத்த வரை 1,68,300 மின்சார கார்கள் விற்பனையாகியுள்ளன. மின்சார கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் முதலிடத்திலும், எம்ஜி மோட்டார்ஸ் இரண்டாமிடத்திலும், மஹேந்திரா மூன்றாவது இடத்திலும், ஹூண்டாய் நான்காவது இடத்திலும் உள்ளன.

Advertisment