Advertisment

நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்... மீண்டும் அதிர்ச்சி!

Electric scooter caught fire in the middle of the road ...!

சாலையில் நின்று கொண்டிருந்த ஓலா நிறுவனத்துக்கு சொந்தமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஓலாநிறுவனம் சார்பில் அண்மையில் இரு மாடல்களில் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஓலா நிறுவனத்தின்எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்கள் வாயிலாக இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுதொடர்பாக ஓலா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 'தங்களது ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், காரணங்களை விரைவில் வெளியிடுவோம்' என்றும் தெரிவித்துள்ளனர். நேற்று வேலூரில் சின்ன அல்லாபுரம் பகுதியில் எலக்ட்ரிக் பைக்பேட்டரி வெடித்ததில் தந்தையும் மகளும் இறந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

fire Maharashtra video
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe