2018-19 ஆம் ஆண்டில் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக ரூ.356 கோடி நன்கொடை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

Advertisment

electoral funds to bjp by tata trust

நாடு முழுவதும் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், முக்கிய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பது வாடிக்கையான ஒரு விஷயம். அந்த வகையில் 2018-19-ல் ரூ.700 கோடி நன்கொடை பெற்றுள்ளது பாஜக. இதில் பாதி தொகை டாடா அறக்கட்டளை அளித்ததாகும். அக்.31ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் பாஜக சமர்ப்பித்த ஆவணங்களின்படி, டாடா பங்களிப்பு செய்யும் புராக்ரசிவ் எலக்டோரல் ட்ரஸ்ட் மட்டும் ரூ.356 கோடி பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் பாஜகவுக்கு டாடா அறக்கட்டளைக்கு அடுத்தபடியாக பார்தி குழுமம், ஹீரோ மோடோ கார்ப்பரேஷன், ஜூப்லியண்ட் ஃபுட்வொர்க்ஸ், ஓரியண்ட் சிமெடண்ட், டி.எல்.எஃப், ஜேகே டயர்ஸ் மற்றும் சில நிறுவனங்கள் அடங்கிய புரூடண்ட் எலக்டோரல் ட்ரஸ்ட் ரூ.54.25 கோடியை அளித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.