Skip to main content

தேர்தல் அதிகாரி மீது சரமாரி தாக்குதல்... (வீடியோ)

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இன்று நாடு முழுவதும் 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 117 தொகுதிகளில் 3 ஆம் கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

 

electoin officer attcked in uttapradesh

 

 

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் தேர்தல் அதிகாரி மீது பாஜக நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு வாக்குச்சாவடி அதிகாரி கூறியதாக சொல்லிய பாஜக தொண்டர்கள் அவரைத் தாக்கினர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் வாக்குச்சாவடி அதிகாரியை அந்த இடத்தை விட்டு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக நீடித்தால் இளைஞர்களுக்குத் திருமணம் கூட நடக்காது' - அகிலேஷ் பேச்சு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
'Youngsters will not get married if BJP rule continues' - akilesh yadav speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களைக்கட்டி உள்ளது. நாளையோடு வேட்புமனு தாக்கல் முடிய இருக்கிறது. நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் இளைஞர்களுக்குத் திருமணம் கூட நடக்காது எனப் பேசி உள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏப்ரல் பத்தாம் தேதியில் இருந்து ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாஜகவும் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணியும் நேருக்கு நேர் மோத உள்ளது. இந்த நிலையில், சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா பகுதியில் நடைபெற்ற ஹோலி விழாவில் கலந்து கொண்ட அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “அரசு வேலையில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதால் உத்தரப் பிரதேசத்தில் அரசுத் தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. இன்னும் 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்தால் வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு வயதாகிவிடும். அதனால் அவர்களுக்கு திருமணம் நடக்காத சூழல் கூட ஏற்படும்' எனக் கடுமையாக விமர்சித்தார்.

Next Story

“என்னைப் பற்றியும், எனது குணத்தைப் பற்றியும்...” - பிரியங்கா காந்தி மீது பா.ஜ.க. எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
BJP MLA sensational allegation on Priyanka Gandhi

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (20.03.2024) தொடங்கி இருக்கும் நிலையில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ.க. தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்திக்கு எதிராக பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலி சதர் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ அதிதி சிங். மறைந்த மூத்த அரசியல்வாதியான அகிலேஷ் சிங்கின் மகளான அதிதி சிங், கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதனையடுத்து, அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். அதன் பிறகு, ரேபரேலி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், அதிதி சிங் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “மக்களவைத் தேர்தலில் சீட் வேண்டுமென்றால், என்னை பற்றியும், எனது குணத்தை பற்றியும் தவறாகப் பேசும்படி என்னுடைய முன்னாள் கணவரிடம் பிரியங்கா காந்தி கூறியிருக்கிறார்” என்று கூறி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.