Advertisment

சட்டசபை தேர்தல் - நாகலாந்து, மேகாலயாவில் இன்று வாக்குப்பதிவு துவக்கம்

assembly polls

Advertisment

மேகாலயா மற்றும் நாகலாந்து சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

மேகாலயா மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளில் இன்று 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 32 பெண்கள் உட்பட மொத்தம் 369 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மேகாலயாவை பொறுத்தவரை தற்போது இங்கு காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. முதல்-மந்திரியாக முகுல் சங்மா பதவி வ்கித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பேரணியாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

Advertisment

இதேபோல், நாகலாந்து மாநிலத்தில் உள்ள 59 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 13-வது சட்டசபையை அமைக்க நாகலாந்து மக்கள் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க. ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி, லோக் ஜனசக்தி, தேசிய மக்கள் கட்சி ஆகியவை தீவிரமாக களமிறங்கி உள்ளன.

இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், இரு மாநிலங்களிலும் காலையில் தொடங்கி மாலை வரை வாக்குப்பதிவு நடைபெறும். சட்டசபை தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.

இரு மாநிலங்களிலும் இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 3-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும் என என்பது குறிப்பிடத்தக்கது.

polls
இதையும் படியுங்கள்
Subscribe