நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதம் ஆகும்!! -தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்தியா முழுவதும் 17-வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற்று முடிந்தது. இதற்கான கடைசி கட்ட மக்களவை தேர்தல் கடந்த (19/05/2019) நடந்து முடிந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியான நிலையில் வரும் 23 ஆம் தேதி (நாளை)நடைபெறும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட 5 மணிநேரம் தாமதமாகும் எனஇந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 The election results will be 5 hours late! -The Election Commission

இந்த வருடம் நடந்த வாக்கு எண்ணிக்கையின் பொழுது விவிபேட் எனப்படும் வாக்கு ஒப்புகை சீட்டுமுறை கொண்டுவரப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் பொழுது விவிபெட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டு சரிபார்த்து வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் எனஎதிர்க்கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில்வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் பதிலை உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது. ஒப்புகை சீட்டுடன் ஒப்பிட்டு வாக்கு எண்ணிக்கை மேற்கொண்டால் தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதமாகும் என தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது.

இந்த வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 5 விவிபேட் இயந்திரங்களை தேர்ந்தெடுத்து ஒப்புகை சீட்டுடன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை ஒப்பிட்டு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கூறியுள்ளது. அதனடிப்படையில் சுமார் 20,000 விவிபேட் இயந்திரங்களில் பதிவான ஒப்புகை சீட்டுகளை ஒப்பிட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் கூடுதல் நேரம் பிடிக்கும் என்பதால் தேர்தல் முடிவுகள் வெளியாக5 மணிநேரம் தாமதமாகும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

election commission supremecourt
இதையும் படியுங்கள்
Subscribe