Advertisment

பாஜகவுக்கு ஓட்டு போட சொன்ன தேர்தல் அலுவலர்; வாக்குப்பதிவு நிறுத்தம்

Election officer asked to vote for BJP; Suspension of polling

கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு இன்று (மே 10, 2023) தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ளன.

Advertisment

தற்போதைய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகோவன் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். வருணா தொகுதியில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரும் போட்டியிடுகின்றனர். கல்புர்கி மாவட்டம் சித்தாபுரா தொகுதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங்க் கார்கேவும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி சன்னப்பட்டினா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். எச்.டி.தேவகவுடா பேரன் நிகில் குமாரசாமி ராமநகரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

Advertisment

காலை 10 மணி நிலவரப்படி 8.26 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் சித்தாப்பூர் தொகுதியில் உள்ள சம்னூரில் பாஜகவுக்கு வாக்கு செலுத்துமாறு தேர்தல் அலுவலரே கூறியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. வாக்குச்சாவடி எண்178க்கு வரும் வாக்காளர்களிடம் பாஜகவுக்கு ஓட்டு போடுமாறு தேர்தல் அலுவலர் கூறியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சித்தாப்பூர் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்க் கார்கே புகார் கொடுத்ததை அடுத்து சம்னூர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவானது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

elections karnataka
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe