கடந்த மக்களவை தேர்தலில் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் பணம் செலுத்துவதாக நரேந்திரமோடி உறுதி அளித்ததாகவும், ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் தற்போதைய மக்களவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இதற்கு பதில் அளித்துள்ளார். அவர், ’’2014ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை. கருப்புப் பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றுதான் கூறினோம். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது’’என்று கூறினார்.

r