election commisson of india today will be announced bihar assembly election

Advertisment

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று (25/09/2020) அறிவிக்கிறது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.

டெல்லியில் இன்று (25/09/2020) மதியம் 12.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவிக்கிறார்.

மேலும் தமிழகத்தில் காலியாக உள்ள மக்களவை தொகுதி, சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் நாடு முழுவதும் காலியாக உள்ள மக்களவை தொகுதிகளுக்கும், சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் அக்டோபர் 29- ஆம் தேதியுடன் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.