Advertisment

‘ராகுல் காந்தியை நேரில் சந்தித்து விளக்கமளிக்கத் தயார்’ - தேர்தல் ஆணையம் பதில் கடிதம்

Election Commission's letter Ready meet Rahul Gandhi and explain about maharashtra election

மகாராஷ்டிராவில் கடந்தாண்டு நவம்பரின் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அதிக இடங்களைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதன்படி, பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பொறுப்பு வகித்து வருகின்றனர். இந்த தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் உதவியோடு பா.ஜ.க மிகப்பெரிய அளவில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சில தினங்களுக்கு முன்பு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

Advertisment

இந்தாண்டு இறுதியில் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள ராகுல் காந்தி இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே ஆயுத்தமாகி வருகிறார். அதன்படி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, “மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. அந்த மேட்ச் பிக்சிங் அடுத்து பீகாரிலும் நடக்கும். பின்னர் பாஜக எங்கு தோற்கிறதோ அங்கும் வரும். மேட்ச் பிக்சிங் தேர்தல்கள் ஜனநாயகத்திற்கும் ஒரு விஷம். சம்பந்தப்பட்ட அனைத்து இந்தியர்களும் ஆதாரங்களைக் காண வேண்டும். அவர்களே தீர்ப்பளிக்க வேண்டும். பதில்களைக் கோருங்கள்” என்று கூறி பா.ஜ.க மீதும் தேர்தல் ஆணையம் மீதும் குற்றச்சாட்டை வைத்தார்.

Advertisment

ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்து பதிலளித்தது. இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்ததாவது, ‘ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், முறையாக நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு நடந்தது. காங்கிரஸின் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களோ அல்லது அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களோ மறுநாள் தேர்தல் அதிகாரி முன் எந்தவொரு ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளையும் எழுப்பவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கு எதிராக எந்தவொரு கட்சியும் மேல்முறையீடுகளை தாக்கல் செய்யவில்லை. இதனால் எந்தக் குறையும் இல்லை என்பது தெளிவாகிறது. யாராவது தவறான தகவல்களைப் பரப்பினால், அது சட்டத்தை அவமதிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் சொந்த அரசியல் கட்சியால் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது’ என்று தெரிவித்தது.

தேர்தல் ஆணையத்தின் எதிர்வினைக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “நீங்கள் ஒரு அரசியலமைப்பு அமைப்பு. உங்களிடம் மறைக்க எதுவும் இல்லையென்றால், மகாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களின் மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கான சமீபத்திய தேர்தல்களுக்கான ஒருங்கிணைந்த, டிஜிட்டல், இயந்திரம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். மேலும், மகாராஷ்டிராவின் வாக்குப்பதிவு நாளில் வாக்குச் சாவடிகளில் இருந்து மாலை 5 மணிக்குப் பிறகு அனைத்து சிசிடிவி காட்சிகளையும் வெளியிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அதனை தொடர்ந்து மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டை வைத்த போதிலும், கருத்து தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகும் கூட, அவர் முறையான புகார் அளிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தது. அதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் ராகுல் காந்தி கடிதம் மூலம் முறையான புகார் அளித்தார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதத்தை தேர்தல் ஆணையம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், அனைத்து தேர்தலும் சட்டவிதிகளின்படி தான் நடத்தப்படுகிறது என்றும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிடும் நாளில் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக நேரில் சந்தித்து விளக்கமளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Assembly election election commision of india election commission Maharashtra Rahul gandhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe