Skip to main content

தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

election commission released national party status

 

அரசியல் கட்சிகளுக்கு தேசிய மற்றும் மாநில அளவிலான கட்சிகள் என்ற அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் சில அளவீடுகளின் அடிப்படையில் வழங்கி வருகிறது.

 

ஒரு அரசியல் கட்சி தேசிய கட்சியாக இருக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் ஏதாவது 4 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் ஆறு சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். அல்லது மக்களவை தேர்தலில் ஏதாவது 3 மாநிலங்களில் இரண்டு சதவீத வாக்குகளை பெற வேண்டும். அல்லது ஏதாவது நான்கு மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட மூன்று விதிகளில் ஏதாவது ஒன்றை பூர்த்தி செய்தால் தேசிய அங்கீகாரம் பெற்ற கட்சியாக அங்கீகாரம் கிடைக்கும். அந்த வகையில் காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ்  மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசிய காட்சிகளாக இருந்து வந்தன.

 

மேலும் டெல்லி, பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆளும் கட்சியாக உருவெடுத்துள்ள ஆம் ஆத்மிக்கு குஜராத் சட்டமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு தேசியக் கட்சியாக மாறிய நிலையில் தற்போது ஆம் தமி கட்சிக்கு தேசிய கட்சி என்ற உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவின் படி இந்தியாவில் காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆத்மி ஆகிய 6 கட்சிகள் தான் தேசிய கட்சிகளாக இருக்கின்றன. மேலும் தேசிய கட்சிகளாக இருந்து வந்த திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை தேசிய கட்சிகளுக்கான அங்கீகாரத்தை இழந்துள்ளன.  அதேபோல் புதுச்சேரியில் பாமகவிற்கு வழங்கப்பட மாநில கட்சி அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்