Advertisment

72 மணி நேரத்தில் பிரதமர் மோடியின் பேனர்களை நீக்க உத்தரவு!

modi hoarding

பெட்ரோல் பங்குகளில் மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு தெரிவிக்கும்பேனர்கள், பிரதமர் மோடியின்புகைப்படத்தோடுஇடம்பெறுவது வழக்கம். இந்தநிலையில், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரிஆகிய ஐந்து மாநிலசட்டப்பேரவை தேர்தல் தேதி, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள்அமலுக்குவந்துள்ளது.

Advertisment

இந்நிலையில் மேற்கு வங்கமாநில ஆளும்கட்சியானதிரிணாமுல்காங்கிரஸின் உறுப்பினர்கள், இந்தியதேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து, பிரதமர் மோடி படத்தோடுகூடிய மத்திய அரசின்திட்டங்களைமக்களுக்கு அறிவிக்கும் பேனர்கள், பெட்ரோல்பங்குகளில் இருப்பதுதேர்தல் விதிமுறை மீறல் எனக் குற்றம்சாட்டினார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, பெட்ரோல்பங்குகளிலிருந்து, மோடியின்படங்கள் அடங்கிய பேனர்களை, 72 மணிநேரத்தில் நீக்க வேண்டும் எனஇந்தியதேர்தல் ஆணையம், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் ஏஜென்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் மற்ற மாநிலங்களிலும், பிரதமர் மோடியின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் நீக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Assembly election west bengal petrol bunk Narendra Modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe