வருகின்ற 27ஆம் தேதி அனைத்து கட்சிகளுடன் கூட்டம் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறுவதை ஒட்டி இந்த கூட்டமானது நடைபெறப்போவதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் ஒ.பி. ராவத் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தல், நான்கு சட்டப்பேரவை தேர்தல்களின் முன்னேற்பாடுகள் குறித்து பேசியிருப்பதாக தெரிகிறது.