பி.எம் நரேந்திரமோடி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் வேடத்தில் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்த இத்திரைப்படம் நாளை வெளியாக இருந்த நிலையில் மக்களவை தேர்தல் முடியும் வரை இத்திரைப்படத்தை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும் பி.எம் நரேந்திரமோடி திரைப்படத்தை நாளை வெளியீட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்த நிலையில் எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று தேர்தல் முடியும் வரை நரேந்திரமோடி அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2019-04-10 at 3.27.02 PM.jpeg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
மேலும் இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படம் என்பதால் வெளியீட தடையில்லை என அறிவித்த நிலையில் இந்திய தேர்தல் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் இப்படத்தின் குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் வெளிநாடுகளில் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி. சந்தோஷ் , சேலம் .
Follow Us