Advertisment

டெல்லி சட்டப்பேரவை, ஈரோடு கிழக்கு தொகுதி; தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!

 Election Commission Announces Election Date at Delhi Legislative Assembly, Erode East Constituency

70 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம், இந்தாண்டு பிப்ரவரி 23ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. அதற்கு முன்னதாக டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டது. மேலும், சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று (07-01-25) தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “டெல்லி சட்டப்பேரவி தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும். அந்த தேர்தலில் பதிவான வாக்குகளை பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதியோடு நிறைவுபெறுகிறது. வேட்பாளர்கள் அளிக்கும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 18ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாகும்.

Advertisment

அதே போல், தமிழகத்தில் உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. வேட்பாளர்கள் அளிக்கும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 18ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாகும்” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் 14ஆம் தேது உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Delhi Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe