EID MUBARAK WISHES PRESIDENT, PRIME MINISTER PEOPLES

Advertisment

நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். பொதுமுடக்க கட்டுப்பாடுகளால் தமிழகம், புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்துகின்றனர். குடியரசுத்தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

EID MUBARAK WISHES PRESIDENT, PRIME MINISTER PEOPLES

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "ரம்ஜான் பண்டிகையால் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் அதிகரிக்கட்டும். ரம்ஜான் நாளில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும், வளமாகவும் இருக்க வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ரம்ஜான் பண்டிகை என்பது அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளம் என்று குறிப்பிட்டுள்ளார்.