childrens eggs puducherry governor order

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு அங்கன்வாடிகளிலும் குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒரு முட்டைக்குப் பதில் மூன்று முட்டைகளை வழங்க தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி (பொறுப்பு) துணைநிலை ஆளுநருமான டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். மேலும், மூன்று முட்டை தருவதால் ஏற்படும் கூடுதல் செலவினத்துக்கும் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, ஆறு மாதம் முதல் ஆறு வயது வரை உள்ள 29,846 குழந்தைகளுக்கு இனி மூன்று முட்டைகள் வழங்கப்பட உள்ளது.

Advertisment

துணைநிலை (பொறுப்பு) ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்று ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், புதுச்சேரியில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து கூடிய சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் பெரும்பான்மை இல்லாததால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இந்த நிலையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு மூன்று முட்டைகளை வழங்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment