Advertisment

கல்வி செயல்திறன் தர அட்டவணை: டாப் 5இல் தமிழ்நாடு! 

performance grading index

மத்திய கல்வித்துறை அமைச்சகம், கல்வி செயல்திறன் தர அட்டவணை ஒன்றை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது. கற்றல் விளைவுகள், அனைவரிடமும் கல்வியைக் கொண்டு சேர்ப்பது, சமமான கல்வியை வழங்குவது, உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள், பள்ளி கல்வியைநிர்வகிப்பது என பள்ளிக்கல்வியில் மாநில/யூனியன் பிரதேச அரசுகள் ஏற்படுத்தியுள்ள முன்னேற்றங்களின் அடிப்படையில் இந்த அட்டவணை வெளியிடப்பட்டுவருகிறது.

Advertisment

இந்தநிலையில்தற்போது 2019 - 2020 ஆண்டிற்கான கல்வி செயல்திறன் தர அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1000 புள்ளிகளுக்கு வழங்கப்படும் இந்த மதிப்பீட்டில், பஞ்சாப் 929 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. சண்டிகர் 912 புள்ளிகளோடு இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாடு 906 புள்ளிகளோடு மூன்றாவது இடத்திலும், 901 புள்ளிகளோடு கேரளா நான்காம் இடத்திலும் உள்ளது.

Advertisment

லடாக் 545 புள்ளிகளோடு பட்டியலின் கடைசிஇடத்தில் உள்ளது. கடைசி ஐந்து இடங்களில் சத்தீஸ்கர், அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து, மேகாலயா, லடாக் ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Kerala Punjab schools Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe