Advertisment

"கல்வி கடன்" தள்ளுபடி முடிவு பின் வாங்கிய காங்கிரஸ் கட்சி !

2019 - மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னால் தலைவர் சோனியாகாந்தி மற்றும் முன்னால் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் , நாடு முழுவதும் விவசாய கடன்கள் ரத்து , விவசாயிகள் வங்கிகளிடம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது , புதுச்சேரி மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து , அரசு தேர்வுகளுக்கு விண்ணப்ப கட்டணங்கள் கிடையாது , நிதி ஆயோக் குழு கலைக்கப்படடும் உட்பட ஐந்து சிறப்பம்சங்களை கொண்ட தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

Advertisment

manifesto

இந்த தேர்தல். அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் , முன்னால் மத்திய அமைச்சரான பா.சிதம்பரம் தலைமையிலான குழு தேர்தல் அறிக்கையை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

"கல்வி கடன்" தள்ளுபடி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் !

அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி இன்று மக்களவை தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டார். இதில் கல்வி கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு இடம் பெறவில்லை. இந்திய இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கும் நிலையில் அவர்களின் கல்வி கடன்கள் தள்ளுபடி என்ற அறிவிப்பு காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என இளைஞர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கல்வி கடன் தொடர்பான எந்த அறிவிப்பும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை. சில பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தியே மத்தியில் தங்கள் அரசு அமைந்தால் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

Advertisment

manifesto

பட்டதாரி இளைஞர்கள் ஏமாற்றம்!

2019- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இதில் கல்வி கடன் ரத்து என்ற அறிவிப்பு வெளியாகும் என நாடே எதிர்பார்த்த நிலையில் அது தொடர்பான அறிவிப்பு தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அடுத்து யார் இந்தியாவில் ஆட்சி அமைக்க முடியும் மற்றும் தீர்மானிக்கும் சக்தி நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதே போல் இளைஞர்களுக்கு உயர்தர இலவச கல்வி என்ற அறிவிப்பும் இடம் பெறவில்லை. எனவே காங்கிரஸ் கட்சியில் தேர்தல் அறிக்கையை கண்டு கூட்டணி கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே போல் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சியான திமுக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மத்தியில் தங்கள் கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்வி கடன் முழுவதும் ரத்து என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பி.சந்தோஷ் , சேலம் .

parliment report elections party congress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe