Skip to main content

மக்கள் கேட்பது மீன் அல்ல;  தூண்டில்! எடப்பாடிக்கு நல்லசாமி பதில்

Published on 12/02/2019 | Edited on 12/02/2019
ன்

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயல்  மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் துயர் துடைக்க அரசின் சிறப்பு நிதியில் இருந்து 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என அறிவித்தார்.    இந்த அறிவிப்பு தேர்தலை மனதில் வைத்து ஓட்டுக்காக சட்டப்படி கொடுக்கும் லஞ்சம் என்றும்,  இதன் மூலமாக மக்கள் வரிப்பணத்தை மக்களுக்கு ஓட்டு லஞ்சமாக கொடுக்கிறார்கள் என்றும்,  அரசியல் கட்சிகள் பல்வேறு  இயக்கங்கள் தொடர்ந்து கண்டன குரல்கள் எழுப்பி வருகின்றது.  


எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள இந்த 2 ஆயிரம் ரூபாய் திட்டத்தை பற்றி நம்மிடம் ’கள்’  இயக்க தலைவர் நல்லசாமி காரசாரமாக கூறியதாவது: எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகள் தொழிலாளர்களை, நெசவாளர்களை அடிப்படையில் கூலி வேலை செய்யும் லட்சக்கணக்கான மானமுள்ள தமிழர்களை கையேந்த வைத்துவிட்டார்.   எங்களுக்கு பணம் கொடுங்கள் என்று எந்த இளிச்சவாயனும் எடப்பாடி பழனிச்சாமியிடம்  போய் கேட்கவில்லை.   இன்னும் சொல்லப்போனால் இலவசம் கொடு,  மானியம் வழங்கு , கடனை தள்ளுபடி செய் என்று கேட்கவில்லை.  நாங்கள் உற்பத்தி செய்த விவசாய விலை பொருட்களுக்கு உரிய விலை என்று கேட்டோம்.     உடல் உழைப்பு தொழிலாளர்களூக்கு கூலி கேட்டோம்.    ஆனால்,  நீங்கள் பிச்சைக்காரரக்ள் என்று இந்த எடப்பாடி பழனிச்சாமி மக்களை பார்த்து முடிவு செய்துவிட்டார்.  ஒட்டுமொத்த மக்களும் கேட்பது..மீன் அல்ல;தூண்டில்தான்.    தூண்டில் கொடுத்தால் எங்களுக்கு மீன் பிடிக்க தெரியும்.   அது போல் வேலை கொடுத்தால் உழைக்க தெரியும்.   அப்படி உழைத்தால் பொருள் உற்பத்தி ஆகும்.   அந்த பொருள் சந்தைக்கு செல்லும்.   அதன் மூலம் உழைப்புக்கான ஊதியம் யாரிடமும் கையேந்தாமல் தானாக வந்து சேரும்.       ஆனால்,  தமிழக அரசு 2 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு குடும்பத்தை அடகு வைத்துவிட்டது.  பாவம் மக்கள்..என்ன செய்வார்கள்.?     அந்த பணத்தையும் வங்கியில் நின்று முட்டிமோதி வாங்கத்தான் செய்வார்கள்.’’

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்குவோம்' - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேச்சு 

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Nallaswamy's operational coordinator speech

 

வருகிற ஜனவரி 21ம் தேதி முதல் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் எனத் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேசுகையில், 'கள் இறக்குவதும் பருகுவதும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்திருக்கக் கூடிய உரிமை. இது உணவு தேடும் உரிமை. இதனை தமிழக அரசு பறித்துக் கொண்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கலப்படத்தை காரணம் காட்டி பறிக்கப்பட்டுள்ளது. இந்த உரிமையை நீர்க்கும் விதமாக வருகிற ஜனவரி 21ம் தேதி தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். நாங்கள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டுத்தான் செயல்பட உள்ளோம். இந்த அரசாங்கம் எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால்  அதற்கு உரிய பதிலை அரசு தர வேண்டும்'' என்று பேசினார்.

 

 

Next Story

“எல்லாத்துக்குமே தனித் தனி ரேட்” - துல்லியமாகச் சொன்ன எடப்பாடி பழனிசாமி

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

Edappadi Palaniswami accurately said, "There is a single rate for everything."

 

திட்டம் கொண்டு வந்தபோது அதை எதிர்த்த திமுக இன்று அந்த திட்டத்தை நல்ல திட்டம் எனக் கூறி அமல்படுத்துகிறது. இதுதான் திமுக ஆட்சி என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

 

சேலத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர் நாம் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வந்த திட்டத்தை எதிர்த்த திமுக., இன்று அந்த திட்டத்தை நல்ல திட்டம் எனக் கூறி அமல்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார். விழாவில் பேசிய அவர், “நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தில் கையகப்படுத்தப்படும் விளைநிலங்களில் தென்னை மரங்களின் வயதினைக் கணக்கிட்டு பணம் கொடுக்கப்பட்டது. அதேபோல் நிலத்திற்கும் தனியாக பணம் வழங்கப்பட்டது. இப்படி இதுவரை யாரும் கொடுத்தது இல்லை. நிலத்தில் வீடு இருந்தால் இன்றைக்கு அதன் மதிப்பு என்னவோ அந்தத் தொகையைக் கொடுத்தார்கள். 

 

இதற்கு முன் திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது டி.ஆர்.பாலு தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது தேசிய நெடுஞ்சாலைகளை நகராட்சித் திட்டத்தில் உருவாக்கினார்கள். அப்போது சாலை செல்லும் வழியில் வீடு இருந்தால் அதன் மதிப்பிற்கு குறைவான பணத்தையே கொடுத்தார்கள். 

 

ஆனால் தற்போது வீட்டிற்கு எந்த மதிப்போ அதைத்தான் கொடுக்கிறார்கள். அதில் டைல்ஸ் கிரானைட் மற்றும் மார்பில்ஸ் போட்டு இருந்தால் அதற்கு தனி ரேட். கிணறு இருந்தால் அதற்கும் தனி ரேட். இத்தனையும் இந்த 8 வழிச்சாலை திட்டத்தில் கொண்டு வந்தார்கள். இந்த திட்டத்தால் எரிபொருள் மிச்சமாகும்; 50 கிமீ பயணம் மிச்சம்; நேரம் மிச்சம். இவை அனைத்தையும் கணக்கிட்டு மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தார்கள். ஆனால் அன்றைக்கு திமுக இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியது. இப்பொழுது அவர்கள் அனைவரும் அந்த திட்டத்திற்கு துணை நிற்கின்றனர்.

 

திட்டத்தைக் கொண்டு வந்தபோது எதிர்த்த திமுக இன்று அந்தத் திட்டத்தை நல்ல திட்டம் எனக் கூறி அமல்படுத்துகிறது. இதுதான் திமுக ஆட்சி” எனக் கூறினார்.