பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தநிலையில், குரு ரவிதாஸின் பிறந்தநாளையொட்டி தேர்தலை தள்ளி வைக்கவேண்டுமெனஎன காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனையேற்று இந்திய தேர்தல் ஆணையம், பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலைபிப்ரவரி 20ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது.
இந்தநிலையில்தற்போது பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினரானபூபிந்தர் சிங் ஹனிக்குச் சொந்தமான இடங்கள் உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறைசோதனை நடத்தி வருகிறது. சட்டவிரோத மணல் எடுப்புதொடர்பான பண மோசடி வழக்கில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.