உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள், இந்த ஐந்து மாநிலங்களிலும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில்இன்று மாலை 3.30 மணியளவில் இந்து ஐந்து மாநிலங்களுக்கானதேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷனும், நிதி ஆயோக்கின் உறுப்பினர் டாக்டர் வி.கேபாலும்அண்மையில், ஐந்து மாநிலங்களிலும் நிலவும் கரோனாசூழல் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் விளக்கமளித்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் ஐந்து மாநிலங்களுக்கானதேர்தல் அட்டவணையை அறிவிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று தேர்தல் அட்டவணையை அறிவிக்கும் தேர்தல் ஆணையம், கரோனாபரவலை கருத்தில்கொண்டுஅரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்குகட்டுப்பாடுகளை அறிவிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.