மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் ஏதாவது பேசி சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். அந்த வகையில் தற்போது புதுவரவாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சை கருத்தை பேசியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் " இன்றைய இளைஞர்கள் இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் படித்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் மாட்டுக்கறி சாப்பிட கற்றுக்கொள்கிறார்கள். இது தவறான ஒன்று. அதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். இந்தியனாக இருந்தார் மட்டுக்கறி சாப்பிட கூடாது.
இதனை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். நாம் அவர்களுக்கு நல்லதை எடுத்து கூறாத காரணத்தால் தான் அவர்கள் தவறான பாதைக்கு செல்கிறார்கள்" என்று அமைச்சர் பேசியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.