Skip to main content

'டீ குடிக்கலாம்... கப்பை சாப்பிடலாம்' வந்தது ஈட்டபிள் கப்! (வீடியோ உள்ளே)

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

தமிழகத்தில் இந்த வருடம் ஜனவரி முதல் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டது. அதன்படி இந்த தடை அமல்படுத்தப்பட்ட இந்த 10 மாத காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு வெகுவாக குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் சமீப காலமாக மீண்டும் பிளாஸ்டிக் பொருள்கள் துளிர்விட ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே, இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து சட்டமியற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

https://www.youtube.com/watch?v=t1gGShlXiqM

இந்நிலையில் பிளாஸ்டிக்கு மாற்றாக ஈட்டபிள் கப்களை ஜினோம்லேப் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கப்கள் முழுக்க முழுக்க தானியங்களால் செய்யப்பட்டது என்றும், செயற்கை வண்ணங்களோ பொருட்களோ கலக்காமல் தயாரிக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 40 நிமிடம் வரை இது நமத்துபோகாமல் இருக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சூடான மற்றும் குளிர்ச்சியான பானங்கள் இரண்டையும் இதில் பயன்படுத்தலாம். தற்போது இந்த வகைக் கப்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. விரைவில் இதைத் தயாரிக இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க இருப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐஸ்கிரீம் டப்பாவில் சிக்கிய தலை; எலிக்கும் பிளாஸ்டிக் கேடு

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
 head stuck in an ice cream can; Plastic is bad for rats

மனிதர்களின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்ற விலங்குகளுக்கும் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். குறிப்பாக வனத்துறை பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும், கடல் பகுதிகளில் குப்பை கூளமாக தேங்கி நிற்கும் பிளாஸ்டிக் பொருட்களால் கடல் உயிரினங்கள் பாதிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் புதுச்சேரியில் சாப்பிட்டு விட்டு தூக்கி எறிந்த ஐஸ்கிரீம் டப்பாவில் தெரியாமல் தலையை மாட்டிக் கொண்ட எலி அவதிப்பட்டதும் அதை அங்கிருந்த காவலர்கள் மீட்டதும் தொடர்பான  வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

 head stuck in an ice cream can; Plastic is bad for rats

புதுச்சேரி கடற்கரை சாலையில் எலி ஒன்று தலையில் ஐஸ்கிரீம் டப்பாவில் தலை சிக்கியபடி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் லாவகமாக பிடித்து எலியின் தலையில் சிக்கி இருந்த பிளாஸ்டிக் ஐஸ்கிரீம் டப்பாவை அகற்றி மீண்டும் விட்டனர். இந்த  காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

காய்கறி வார சந்தையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்!

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

Plastic Eradication Awareness Campaign at Weekly Vegetable Market

 

உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் நேற்று (01.12.2021) மாலை உளுந்தூர்பேட்டை காய்கறி வார சந்தையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் இரமேஷ் பாபு தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர்கள் வின்சென்ட், திலீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பொருளாளர் முருகன் வரவேற்றார்.  

 

மாவட்ட சிறப்புத் திட்டத் தலைவர் அன்பழகன், வெங்கடாஜலபதி, முத்துக்குமாரசாமி,  மூத்த உறுப்பினர் ரவி பேரூராட்சி மேற்பார்வையாளர்கள் தமிழ்மணி,  சத்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் காய்கறி வாரச் சந்தையில் பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வாங்கிவந்த 100க்கும் மேற்பட்டவர்களிடம் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், அவர்களுக்குத் துணிப்பை வழங்கப்பட்டது. உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது.