Skip to main content

டெல்லியில் நிலநடுக்கம்; பொதுமக்கள் அச்சம்

Published on 03/10/2023 | Edited on 03/10/2023
 Earthquake in Delhi; Public fear

 

டெல்லியின் தெற்கு பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மட்டுமல்லாது உத்தரகண்ட், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால் குடியிருப்பில் இருந்தவர்கள் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறவர்கள் வெளியே வந்தனர். அதேநேரம் நேபாளத்தில் பிற்பகல் 2:25 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. அதேபோல் 2.51க்கு ரிக்டர் அளவுகோலில் 6.2  ஆக பதிவாகியுள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் முடிவு எதிரொலி- 'இந்தியா' கூட்டணி வெளியிட்ட திடீர் அறிவிப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Election result reverberation - sudden announcement made by 'India' alliance

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும், பிஆர்எஸ் 42 இடங்களிலும், பாஜக  9 இடங்களிலும், மற்றவை 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

 

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 154 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 72 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக 106 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 76 இடங்களிலும், மற்றவை 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சத்தீஸ்கரில் 45 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது. நாளை மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

 

5 மாநில தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா அல்லது இல்லையா என்பது தொடர்பான கருத்துக்கள் எழுந்து வருகிறது.  5 மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாக 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை மல்லிகார்ஜுன கார்கே கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடல்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Closure of Afghanistan Embassy in India 

 

இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

டெல்லியில் செயல்பட்டு வந்த இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் நாட்டின் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தூதரகம் சுமுகமாகச் செயல்பட இந்தியாவின் சிறப்பு உதவிகள் இல்லாதது, பணியாளர் எண்ணிக்கை குறைப்பு, தாலிபான் அரசு நியமிக்கும் தூதருக்கு இந்தியா சட்ட அங்கீகாரம் அளிக்க விரும்பவில்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடப்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

அதே சமயம் தாலிபான் அரசை இந்தியா அங்கீகரிக்கும் வரை தூதரக விவகாரத்தில் முடிவு எட்டப்படாது எனவும், இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதால் வர்த்தக ரீதியாக இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை என்றாலும், இந்தியாவில் இருக்கும் ஆப்கானிஸ்தான் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நவம்பர் 1 ஆம் தேதி முதல் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக ஆப்கானிஸ்தான் தூதரகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்