andaman

Advertisment

அந்தமான் தீவில் நிகோபார் பகுதியில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளியாக பதிவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கட்டிடங்கள் குலுங்கின, நிலநடுக்கத்தால் பீதி அடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

இதேபோல இன்று அதிகாலை இந்தோனேசியா தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.0 ஆக பதிவாகியுள்ளதால் சுனாமி எச்சரிக்கையும் அங்குவிடப்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கம் பத்து கிலோமீட்டர் ஆழத்திலேயே ஏற்பட்டுள்ளதால் கடலோர மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.