ஜம்மு காஷ்மீரில் நேற்று ஒரே நாளில் நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இடமாக உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில் நேற்று இரவு 10 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிக்குள் நான்கு முறை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 4.7 என்ற அளவில் பதிவான முதல் நிலநடுக்கம், நான்காவது முறை 5.5 என்ற அளவில் இருந்தது. ஒரே நாளில் ஏற்பட்ட நான்கு நிலநடுக்கங்களால் காஷ்மீர் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தார்கள். அந்தமானிலும் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Follow Us