himachal pradesh

Advertisment

இமாசல பிரதேசம், கின்னார் பகுதியில் இன்று மதியம் குறைந்தளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது.

இதுபற்றி வானிலை மைய அதிகாரி மன்மோகன் சிங் கூறும்போது, அப்பகுதியில் 10 கீலோமீட்டர் ஆழத்திற்கு நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என்று கூறினார். இந்த சம்பவத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிரிழப்பு பற்றிய தகவல்கள் உடனடியாக வெளிவரவில்லை.