Advertisment

3 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர்,47 நாட்கள் பயணம்... நிலவில் சந்திரயான்-2!

நிலவில் கால் பதிக்கும் இந்தியாவின் வரலாற்று பயணம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. சந்திரயான் 2 திட்டத்தின் முக்கிய நிகழ்வான நிலவில் தென் துருவத்தில் தரை இறங்குவிருக்கிறதுவிக்ரம் லேண்டர். நிலவின் தென் துருவத்தில் மான்சினஸ்-சிசிம்பிலிஸ்-எஸ் என்ற பள்ளத்தாக்குகளுக்குநடுவே தரை இறங்க இருக்கிறது.

Advertisment

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 22 ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலம்வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து ஜூலை 24ம் தேதி தனது முதல் வட்ட பாதையை வெற்றிகரமாக கடந்து சென்ற ஆண்டு சந்திரயான் -2 கடந்த 14ஆம் தேதி புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகிய சந்திரயான்-2 நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது. இதையடுத்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி சந்திரயான்-2 நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றத் தொடங்கியது. ஆகஸ்டு 22 ஆம் தேதி அன்று நிலவின் முதல் புகைப்படத்தை சந்திரயான்-2 பூமிக்கு அனுப்பியது.

chandtayan2

ஆகஸ்டு 26-ஆம் தேதி இரண்டாவது முறையாக நிலவின் படத்தை அனுப்பியது சந்திரயான்-2, செப்டம்பர் 2 ஆம் தேதி சந்திரயான்- 2 விண்கலத்தின் ஆர்பிட்டரலிருந்து லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. முதல்முறையாக செப்டம்பர் 3 ஆம் தேதி லேண்டர் விக்ரமின் சுற்றுவட்ட பாதை குறைக்கப்பட்டது. இரண்டாவது முறையாக 4 தேதி சுற்றுவட்ட பாதை மீண்டும் வெற்றிகரமாக குறைக்கப்பட்டது.

Advertisment

பிரக்யான் ரோவரை சுமந்து செல்லும் விக்ரம் லேண்டர் நிலவில் எப்படி தரையிறங்கும், அதிலுள்ள பாகங்கள் நிலவில் உள்ள சரியான இடத்தை கண்டறிந்து எவ்வாறு தரையிறங்கும் என்பது குறித்த வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

chandtayan2

இன்று அதிகாலை 1.30 மணி முதல் இரண்டு முப்பது மணிக்குள் நிலவைத் தொட ஆயத்தமாகி வருகிறது விக்ரம் லேண்டர். தரையிறங்கிய பிறகு அது சுமந்து செல்லும் பிரக்யான் ரோவர் அதிகாலை ஐந்து முப்பது மணி முதல் ஆறு முப்பது மணிக்குள் வெளியே வரும். முதலில் லேண்டர் சந்திரனின் தெற்கு பகுதியில் சுமார் 70 டிகிரி அட்சரேகையில் இரண்டு பள்ளங்களுக்குஇடையே உள்ள உயரமான சமவெளிப் பகுதியில் தரையிறக்கப்படும்.1471 கிலோ எடை கொண்ட விக்ரம் லேண்டரில்உயர் தொழில்நுட்பமான லேண்டர் போசிஷன் டிடெக்ஷன் கேமரா, லேண்டர் ஹாரிசாண்டல் வெலாஸிட்டிகேமரா மற்றும் லேண்டர் அஸர்ட்கேமரா ஆகிய மூன்று high-resolution கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நிலவின் மேற்பரப்பில் சரியான இடத்தை தேர்வு செய்து நிலவு பகுதியில் தரை இறங்கும் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க இந்த கேமராக்கள் உதவுகின்றன.

chandtayan2

நிலவில் தரை இறங்கும்போது விக்ரம் இருக்கும் நிலைக்கும் எவ்வளவு தூரம் இடைவெளி இருக்கிறது என்பதை கணக்கிடும் ஆல்டி மீட்டர் விக்ரமுடன் இணைக்கப்பட்டிருக்கும். நிலவின் மேற்பரப்பின் வடிவத்தைப் பற்றி லேசர்அல்டி மீட்டர் கணக்கில் அந்த நேரத்தில் லேண்டரில் உள்ள கேமராக்கள் பிரக்யான் ரோவரைதாங்கி நிலையாக நிறுத்த உதவும். இரண்டு எஞ்சின்கள் கீழிறங்குவது உணரக்கூடிய சென்சார்கள் மற்றும் சோலார் பேனல்கள் ஆகியவை செயல்பட தொடங்கும்.

chandtayan2

இத்தனை கருவிகளும் பிரக்யானை கீழிறக்க உகந்த சூழல் இருப்பதை உறுதி செய்த பின்னரே விக்ரம் தரையிறக்கும். விக்ரம் தரையிறங்குவதற்கு முன்புவரை சந்திரயான்-2 பூமியிலிருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ளது.

scientist ISRO moon chandrayan 2
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe