Skip to main content

அதிகாலையில் நிகழ்ந்த சாலை விபத்து; 4 பேர் உயிரிழப்பு

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
An early morning road accident; 4 people lost their lives

திருப்பதி அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் காரில் ஒன்றாக சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு சென்றிருந்த நிலையில், பின்னர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலுக்கு இன்று காலை காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

கார் நாயுடுபேட்டை-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் கொங்கரவாரிபள்ளி என்கிற இடத்தில் சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதியது. இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சந்திரகிரி போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்