ஆன்லைன் வர்த்தகத்தின் டெலிவரிப் பிரிவில் அடுத்த வருடத்திற்குள் பெண் பணியாளர்கள் தற்போது இருப்பதைவிட இரட்டிப்பாக உயரும் என ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ecommerce-in.jpg)
அமேசான் நிறுவனத்தில் 2016-ம் ஆண்டு டெலிவரிப் பிரிவில் வெறும் 20 பெண் பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் தற்போது 800 பணியாளர்கள் இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஸ்விகியில் அடுத்த ஆறு மாதத்திற்குள் கூடுதலாக 1,500 பெண் பணியாளர்களை டெலிவரிப் பிரிவில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்விகியில் தற்போது 50 பெண் பணியாளர்கள் டெலிவரிப் பிரிவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)