/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/szdgdrgdr.jpg)
தனது நண்பரின் வீட்டிற்கு பார்ட்டிக்காக சென்ற பெண் டி.எஸ்.பி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவியல் புலனாய்வுத் துறையில் (சிஐடி) டி.எஸ்.பி யாக பணியாற்றி வந்தவர் லட்சுமி (33). பெங்களூரில் வசித்துவந்த இவர் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக அன்னபூர்னேஷ்வரி நகர் பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். பார்ட்டி முடிந்த நிலையில், அவர் அந்த நண்பரின் வீட்டில் சடலமாகக் கிடந்துள்ளார். இதனையடுத்து அங்கு விரைந்த போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அன்னபூர்னேஷ்வரி நகர் காவல் நிலைய எல்லையில் உள்ள தனது நண்பரின் வீட்டில் லட்சுமி தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், இந்த சம்பவம் தொடர்பாக லட்சுமியின் நண்பர்கள் நான்கு பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்களுடன் அவருக்கு ஏதேனும் பிரச்சனையா, பார்ட்டியில் ஏதேனும் சண்டை நடைபெற்றதா போன்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)