Advertisment

தாறுமாறாகக் காரை ஓட்டிய போதை தம்பதி; கிரேனை வைத்துத் தடுத்த போலீசார்

A drunken couple who drove the wrong way; The police stopped it with a crane

மது போதையில் வந்த தம்பதிகள் தாறுமாறாக காரை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விட்டு நிற்காத நிலையில், போலீசார் கிரேனை வைத்து அவர்களைப் பிடித்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கேரள மாநிலம் கோட்டயம் அடுத்துள்ள மரியபள்ளி பகுதியில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டருக்கு கார் ஒன்று தாறுமாறாக படு வேகத்தில் பறந்தது. பல இடங்களில் தடுத்து நிறுத்தியும் காரானது வேகமாகப் பறந்தது. இதை அறிந்து போலீசார் சாலையில் பெரிய ராட்சத கிரேனை நிறுத்தி அந்த காரைதடுத்து நிறுத்தினர்.

Advertisment

காரில் தம்பதி இருவர் இருந்தனர். இருவரும் மித மிஞ்சிய போதையில் இருந்தது தெரிய வந்தது. சட்டையைப் பிடித்து காரை இயக்கிய நபரை போலீசார் வெளியே இழுத்தனர். ஆனால் அந்த நபர் போலீசாருக்கே மிரட்டல்விடும் வகையில் பேசினார். மேலும் அந்த காரில் 5 கிராம் அளவிற்கு கஞ்சா இருந்ததும் தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

incident Kerala police speed
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe