manipur

Advertisment

மணிப்பூர் மாநிலத்தில்மோரே நகரில் உள்ள வீட்டிலிருந்து54 கிலோ பிரவுன்சுகர் மற்றும் 154 கிலோ ஐஸ் மெத் உள்பட500 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களைஅசாம் ரைஃபிள்ஸ் படை கண்டுபிடித்துள்ளது. இந்த வீடு ஒரு பெண்ணிற்கு சொந்தமானது என அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், அந்தப் பெண் தற்போதுமியான்மரில் உள்ள மாண்டலேவில் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக கூறியுள்ள அதிகாரபூர்வ வட்டாரங்கள், அப்பெண்ணின் கணவர் சீனாவைச் சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளன. 500 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் போதைப்பொருள் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.