Skip to main content

முந்த்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் கடத்தல் - நாங்க என்ன செய்ய முடியும் என கைவிரித்த அதானி!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

ி

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் வந்ததையடுத்து துறைமுகத்திற்கு வந்த அனைத்து கண்டெய்னர்களையும் அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். இதில் 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட 21 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை செய்ததில் இந்த பொருட்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக இருவரை காவல்துறையினர் தற்போது வரை கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். 

 

இதற்கிடையே அதானிக்கு சொந்தமான இந்த துறைமுகத்தில் இருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதானி மற்றும் பாஜகவை கடும் விமர்சனம் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த ஆட்சியே அதானிக்காக நடத்தப்படுவதாக பலமுறை குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக தரப்பு பதிலளித்துள்ளது. அதில், " இந்திரா, ராஜூவ் காந்தி விமான நிலையத்தில் போதைபொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டால் அதற்கு ராஜூவ், இந்திரா காரணம் என்று கூறுவதை போல இருக்கிறது என காங்கிரஸ் கட்சியை பாஜக விமர்சனம் செய்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அதானி நிறுவனம்,"கண்டெய்னரில் வரும் எந்த ஒரு பொருட்களையும் பிரித்து பார்ப்பதற்குரிய அதிகாரம் துறைமுக நிர்வாகத்திடம் இல்லை. அரசு துறை அதிகாரிகளுக்கு மட்டும்தான் அதற்கான அதிகாரம் இருக்கிறது. எனவே அதற்கான அதிகாரம் இல்லாத நிலையில் எங்களை குறை கூறுவது ஏற்கும்படியாக இல்லை" என்று தெரிவித்துள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு; அம்பானி, அதானி எந்த இடத்தில்?

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Publication of World Rich List

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் ஆண்டுதோறும் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலை ‘புளூம்பெர்க்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில், 200 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் அமேசான் நிறுவனரான தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ், மீண்டும் உலகின் முதல் பெரும் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதுவரை உலகின் முதல் பெரும் பணக்காரராக இருந்த டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி ஜெஃப் பெசோஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க், 198 பில்லியன் டாலர்களுடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். லுயுவுட்டன் ஆடம்பரப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் சி.இ.ஓ பெர்னார்டு அர்னால்ட், 197 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக இருக்கிறார். 150 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் மைக்ரோசாப்ட் நிறுவனர், பில்கேட்ஸ் 5வது இடத்தைப் பிடித்துள்ளார். 

இந்த பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, 115 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 11வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் மற்றொரு தொழிலதிபரான அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, 104 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலக பணக்காரர்களின் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார். 

Next Story

ஹிண்டன்பர்க்கின் அடுத்த அறிவிப்பு; பரபரப்பான இந்தியா!

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

Hindenburg said New report soon another big one

 

அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கடந்த மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தும், அதானி குழுமத்தின் முன்னாள் உயரதிகாரிகள் சிலரை நேர்காணல் செய்தும் திரட்டியது என ஹிண்டன்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

மேலும், அந்த ஆய்வறிக்கையில் பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்திக் காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் துவங்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றச் செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. மேலும் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து 20வது இடத்திற்கு மேல் அதானி தள்ளப்பட்டார். இதனை இந்தியாவிற்கு எதிராக தொடுக்கப்பட்ட போர் என்று அதானி தெரிவித்திருந்தார். இருப்பினும் இந்தியா முழுவதும் அதானிக்கு எதிராகவும், இந்த விவகாரம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். 

 

குறிப்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதானி விவகாரத்தை கையில் எடுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இதனால் அமளி ஏற்பட்டு நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் அதானிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள ட்வீட் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஹிண்டன்பெர்க் நிறுவனம் மேலும் ஒரு முக்கிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தற்போது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆனால் ஹிண்டன்பர்க் நிறுவனம் எதை பற்றி என்று குறிப்பிடாததால், பலரும் அதானி குறித்த மேலும் சில ஊழல் பட்டியலை தான் அந்த நிறுவனம் வெளியிடப்போகிறது எனக் கூறி வருகின்றனர்.