dsfdsfsdf

கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது.

Advertisment

இந்நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட் என்ற இடத்தில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு 12 மிராஜ் 2000 ஜெட் விமானங்கள் எல்லை தாண்டிச்சென்று சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பயங்கரவாதிகள் முகாம் மீது வீசி அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் இன்று காலை குஜராத்தின் அப்தசா பகுதியில் சுற்றி திரிந்த சிறிய ரக ஆளில்லா ட்ரோன் விமானம் இந்தியா ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் ராணுவம் மற்றும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.