Advertisment

பேருந்தில் சேட்டை செய்த ஓட்டுநருக்கு ஆர்டிஓ கொடுத்த ஷாக் தண்டனை!

கேரளாவின் கல்பெட்டா பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ ஒன்று காண்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அந்த வீடியோவில், வாகனத்தின் முன்பகுதியில் ஓட்டுநர் அமர்ந்திருக்க, அவரை சுற்றி இளம் பெண்கள் சிலர் நின்று கொண்டிருக்கிறார்கள். அப்போது வாகனத்தை ஓடி கொண்டிருக்கும் போதே டிரைவர் இளம் பெண்களை கியர் மாற்ற அனுமதிக்கிறார்.

Advertisment

jh

இதனை ஒருவர் வீடியோ எடுக்க அது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து அந்த டிரைவரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். பொறுப்புடன் வாகனத்தை இயக்க வேண்டியவர் எப்படி இவ்வாறு விளையாட்டு தனமாக செயல்படலாம் என பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள். மேலும் சாலையில் செல்வோரின் பாதுகாப்பும் முக்கியம் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் இந்த வீடியோ ஆர்.டி.ஓ பார்வைக்கு செல்ல, அதுகுறித்து விசாரணை மேற்கொண்ட அவர், வாகனத்தை பாதுகாப்பாக இயக்கத் தவறியதாக டிரைவர் ஷாஜியின் ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.

Advertisment

busdriver
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe