மது குடிக்கும் போட்டியில் பங்கேற்றவர் உயிரிழந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டத்தை தேர்ந்தவர் ராஜேந்திர சிங். இவர் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்ற அவர், அங்கு மது குடித்துள்ளார். அப்போது அவருக்கும் அவருடைய உறவினருக்கு மது குடிப்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
10 நிமிடத்தில் 4 குவாட்டர் பாட்டில்களை யார் குடிக்கிறார்களோ அவருக்கு, தோற்றவர் 1000 ரூபாய் தர வேண்டும் என்று கூறி பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலில் ராஜேந்திர சிங் 10 நிமிடம் முடிவதற்குள் 4 குவாட்டர் பாட்டில்களை தண்ணீர் கலக்காமல் குடித்துள்ளார். இதனால் ஆச்சரியமான அவரது உறவினர் அவருக்கு 1000 ரூபாய் பணம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற ராஜேந்திர சிங் ரத்த வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)