Advertisment

உடை மாற்றும் ரூமிற்கு சென்ற பெண்...கதவை தட்டிய ஊழியர்...அதிர்ச்சி சம்பவம்!

துணி கடையில் புது டிரஸ் எடுத்துவிட்டு உடை மாற்றும் அறைக்குள் சென்ற பெண்ணை அங்கே வேலைபார்த்த பெண் ஊழியர் அந்த அறையில் கேமரா இருக்கு வெளியே வாங்க என்று கதவை தட்டி கூப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் துணி கடை ஒன்றில் சஞ்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் துணி எடுக்க சென்றுள்ளார். சஞ்சனா ஒரு பிரபல பத்திரிகையில் வேலை பார்ப்பவர். துணி கடையில் தனக்கு வேண்டிய அளவில் துணி எடுத்து விட்டு உடை மாற்றும் அறையில் பரிசோதித்து பார்ப்பதற்காக அங்குள்ள பெண் ஊழியரிடம் உடை மாற்றும் அறை எங்கு உள்ளது என்று கேட்டுள்ளார். அப்போது அந்த பெண் ஊழியர் உடை மாற்றும் ரூமை காட்டியுள்ளார். சஞ்சனாவும் உடை மாற்றுவதற்காக அந்த அறைக்குள் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த ரூமின் கதவை பெண் ஊழியர் தட்டியுள்ளார்.

Advertisment

dressing room

மேலும் அந்த அறையில் உடை மாற்ற வேண்டாம் அந்த அறையில் கேமரா உள்ளது என்று கூறியுள்ளார். இதை கேட்ட சஞ்சனா அதிர்ச்சியடைந்து வெளிவந்து அந்த பெண் ஊழியரை திட்டியுள்ளார். நான் உங்களிடம் கேட்டு தானே அந்த அறைக்கு சென்றேன். இப்போ இப்படி சொல்றீங்க என்று கோபமாக சண்டை போட்டுள்ளார். சஞ்சனா கோபமாக சண்டை போடுவதை பார்த்த அந்த துணி கடை ஓனர் சஞ்சனாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, அந்த அறையில் பதிவான விடியோவை தனது மகனிடம் கூறி நீக்கியுள்ளார். இருந்தாலும் கோபம் தீராத சஞ்சனா கடை உரிமையாளரிடமும், ஊழியர்களிடமும் அப்புறம் ஏன் என்னை அந்த ரூமுக்கு போங்க என்று கூறினீர்கள் என்று கேட்டுள்ளார்.அதற்கு யாரும் சரியாக பதில் கூறாத நிலையில், அருகில் இருந்த காவல் துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் காவல்துறையினர் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். டெல்லியில் துணி கடை ஒன்றில் இப்படி நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

complaint shops Textile Young woman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe