Skip to main content

உடை மாற்றும் ரூமிற்கு சென்ற பெண்...கதவை தட்டிய ஊழியர்...அதிர்ச்சி சம்பவம்!

Published on 07/09/2019 | Edited on 07/09/2019

துணி கடையில் புது டிரஸ் எடுத்துவிட்டு உடை மாற்றும் அறைக்குள் சென்ற பெண்ணை அங்கே வேலைபார்த்த பெண் ஊழியர் அந்த அறையில் கேமரா இருக்கு வெளியே வாங்க என்று கதவை தட்டி கூப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் துணி கடை ஒன்றில் சஞ்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற  பெண் துணி எடுக்க சென்றுள்ளார். சஞ்சனா ஒரு பிரபல பத்திரிகையில் வேலை பார்ப்பவர். துணி கடையில் தனக்கு வேண்டிய அளவில் துணி எடுத்து விட்டு உடை மாற்றும் அறையில் பரிசோதித்து பார்ப்பதற்காக அங்குள்ள பெண் ஊழியரிடம் உடை மாற்றும் அறை எங்கு உள்ளது என்று கேட்டுள்ளார். அப்போது அந்த பெண் ஊழியர் உடை மாற்றும் ரூமை காட்டியுள்ளார். சஞ்சனாவும் உடை மாற்றுவதற்காக அந்த அறைக்குள் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த ரூமின் கதவை பெண் ஊழியர் தட்டியுள்ளார். 
 

dressing room



மேலும் அந்த அறையில் உடை மாற்ற வேண்டாம் அந்த அறையில் கேமரா உள்ளது என்று கூறியுள்ளார். இதை கேட்ட சஞ்சனா அதிர்ச்சியடைந்து வெளிவந்து அந்த பெண் ஊழியரை திட்டியுள்ளார். நான் உங்களிடம் கேட்டு தானே அந்த அறைக்கு சென்றேன். இப்போ இப்படி சொல்றீங்க என்று கோபமாக சண்டை போட்டுள்ளார். சஞ்சனா கோபமாக சண்டை போடுவதை பார்த்த அந்த துணி கடை ஓனர் சஞ்சனாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, அந்த அறையில் பதிவான விடியோவை தனது மகனிடம் கூறி நீக்கியுள்ளார். இருந்தாலும் கோபம் தீராத சஞ்சனா கடை உரிமையாளரிடமும், ஊழியர்களிடமும் அப்புறம் ஏன் என்னை அந்த ரூமுக்கு போங்க என்று கூறினீர்கள் என்று கேட்டுள்ளார்.அதற்கு யாரும் சரியாக பதில் கூறாத நிலையில், அருகில் இருந்த காவல் துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் காவல்துறையினர் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். டெல்லியில் துணி கடை ஒன்றில் இப்படி நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

சார்ந்த செய்திகள்

Next Story

இளம்பெண் கொலை வழக்கு; இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Police caught youth in case of case of young woman

சென்னையிலிருந்து ரமேஷ் மற்றும் அவரது காதலி பவித்ராஸ்ரீ இருவரும் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டு திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்வதற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது திண்டிவனம் அருகே உள்ள கோனேரி குப்பம் பகுதியில் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது இரண்டு பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வழி மறித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்ட மர்ம கும்பல் ரமேஷின் காதலி பவித்ராஸ்ரீயை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.

இதையடுத்து மர்ம நபர்களிடம் இருந்து தப்பித்து ஓடிய பவித்ராஸ்ரீ அந்த வழியாக வந்த கார் மீது மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைப் பார்த்த மர்ம நபர்கள் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட ஒலக்கூர் போலீசார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில்தான் திண்டிவனம் டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீசார், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில், அந்த மர்ம நபர்கள் இருவரும் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை, இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில்,  திருநெல்வேலி மாவட்டம் கோழியன் குளம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சந்திர பெருமாள் என்பவரது மகன் 24 வயது உதய பிரகாஷ், மற்றொருவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் இருவரும் தங்கள் சொந்த வேலை காரணமாக சென்னை சென்றிருந்தனர். சம்பவம் நடந்த அன்று சென்னையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, கோனேரி குப்பம் அருகே ரமேஷ் அவரது காதலி பவித்ராஸ்ரீயும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்ததை நோட்டமிட்டு அவர்களை வழிமறித்து தாக்கி அவர்களிடமிருந்து செல்போனை பறித்துள்ளனர். ஆனால் பவித்ராஸ்ரீ தனது செல்போனை கொடுக்க மறுத்துள்ளார். பின்பு அவரிடம் செல்போனை பறித்து வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து சென்றபோது காரில் அடிப்பட்டு பவித்ராஸ்ரீ உயிரிழந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இருவரிடமும் பறிக்கப்பட்ட செல்போனகள் குறித்து விசாரித்தபோது, விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பியாம்புலியூர் ஏரிக்கரையில் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறியுள்ளனர். அதனைப் பறிமுதல் செய்வதற்காக இருவரையும் அழைத்துக்கொண்டு காவல் உதவி ஆய்வாளர் ஐயப்பன், ஏட்டு தீபன் மற்றும் காவலர்கள் சென்றுள்ளனர். அங்கு செல்போனை எடுத்துக் கொடுத்த உதயபிரகாஷ் செல்போனுக்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து, காவல் உதவி ஆய்வாளர் ஐயப்பன் மற்றும் ஏட்டு தீபன் இருவரையும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பித்து ஓடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வேறு வழியின்றி உதவி ஆய்வாளர் ஐயப்பன், உதயபிரகாஷின் வலது காலில் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். உடனே சரிந்து விழுந்த அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்கப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் ஏட்டு தீபன் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

Next Story

ஏ.வி. ராஜு மீது கருணாஸ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Complaint against AV Raju in Karunas Police Commissioner's office

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளைத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்திருந்தார். அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு த்ரிஷாவுக்கு ஆதரவாக சேரன், ஃபெப்சி அமைப்பு, மன்சூர் அலிகான், விஷால் உள்ளிட்டவர்கள் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே ஏ.வி. ராஜு, “என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில், சில ஊடகங்களில் திரைப்படத் துறையினரை அவதூறாக நான் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நான் பேசியது அரசியல் ரீதியாக மட்டும் தான் பேசினேன். அந்த இடத்தில் பேட்டியை முடித்த பின்பு ஒரு சிலர் கேட்ட கருத்துக்கு நான் அந்த விளக்கத்தை சொன்னேன். எந்த இடத்திலும் திரைத்துறையினரை வருத்தப்படும் அளவிற்கு பேசக் கூடியவர் நான் அல்ல.

ஒருவேளை அப்படி பேசியதாக தகவல்கள் உங்களுக்கு தவறாக கிடைத்திருந்தால், நான் உங்கள் அனைவருக்கும், பெப்சிக்கும், திரைப்பட நடிகர் சங்கத்திற்கும் மற்றும் சம்பந்தப்பட்ட திரிஷாவுக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை மனம் புண்படும்படி இருந்திருந்தால் என் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என வீடியோ வெளியிட்டிருந்தார். 

கூவத்தூர் விவகாரத்தில் த்ரிஷாவை சம்பந்தப்படுத்தி பேசியபோது கருணாஸ் குறித்தும் பேசியிருந்தார். இந்த நிலையில், ஏ.வி. ராஜு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். மேலும் அவரது பேட்டியை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.