Skip to main content

ஆதார் எண்ணை பகிர வேண்டாம்-ஆதார் நிறுவனம்  

Published on 22/08/2018 | Edited on 22/08/2018
adhar num

 

இணையதளம், சமூக வலைதளம் போன்ற தேவையற்ற இடங்களில் யாரும் தங்களுடைய ஆதார் எண்ணை பகிரக்கூடாது என்று ஆதார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வெளிப்படையாக பகிரக்கூடிய எண் இல்லை என்று அறிவுறுத்தியுள்ளது. ஆதார் எண்ணில் கைரேகை, கருவிழி ஸ்கேன், க்யூஆர் கேட் உள்ளிட்டவைகளை சரிபார்க்கும் முக்கிய அம்சங்கள் இருப்பதால், இதை வைத்து குளறுபடி செய்ய முடியாது என்றாலும் சிலர் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று ஆதார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

தேவையில்லாத தங்களின் தனிப்பட்ட விவரங்களை நாம் யாருக்கும் பகிர விரும்புவதில்லை, அதுபோலத்தான் ஆதார் எண்ணையும் நாம் யாருக்கும் பகிர தேவையற்றது என்று குறிப்பிட்டுள்ளனர்.      

சார்ந்த செய்திகள்

Next Story

சமூகவலைதள கணக்குகளுடன் ஆதார் இணைக்கக்கோரிய வழக்கு... வழிகாட்டுதல் குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவு! 

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

தொழில்நுட்பம் ஆபத்தான பாதையை நோக்கி திரும்பி இருப்பதால் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 Aadar number linked to social network accounts ... Court order to set up guidance panel!


பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்க வேண்டி உத்தரவிட வேண்டும் என்ற வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் தீபக், அனிருத்தா போஸ் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவது, இணையதளத்தை பயன்படுத்தி நிகழ்த்தப்படும் குற்றங்களை கண்டு பிடிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். இது அறிவியல் பூர்வமான விவகாரம் எனவே உச்ச நீதிமன்றமோ, உயர்நீதிமன்றமோ இது குறித்து முடிவு செய்வது உரிய ஒன்றாக இருக்காது என கருத்து தெரிவித்த நீதிபதிகள்.

 

 Aadar number linked to social network accounts ... Court order to set up guidance panel!


இணையதள குற்றங்களை நிகழ்த்துபவர்களை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை என்று கூறி விலகிவிட முடியாது. அதேபோல் ஒன்றை செய்வதற்கு தொழில்நுட்பம் உள்ள பொழுது அதை தடுப்பதற்கும் நிச்சயம் தொழில்நுட்பம் இருக்கவேண்டும் என சுட்டிக்காட்டினர்.

ஆபத்தான பாதையில் தொழில்நுட்பம் திரும்பி இருப்பதால் இணையதள குற்றங்களை தடுப்பதற்காக மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். வழிகாட்டு நெறிமுறைகளை அமைப்பதற்கான கால அவகாசம் குறித்து மூன்று வாரங்களில் மத்திய அரசு பதில் தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

Next Story

ஆதாருக்கு மூடுவிழா..? நடுத்தெருவில் ஊழியர்கள்....!!!

Published on 15/06/2019 | Edited on 15/06/2019

தனிமனிதனுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமா.? இல்லையா.? எனும் கேள்வி இன்று வரை நீடித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் ஆதார் மையங்களில் பணிபுரியும் 376 ஊழியர்களின் ஐ.டி.யை முன்னறிவிப்பின்றி பிளாக் செய்ததோடு மட்டுமில்லாமல், கேள்வியேக் கேட்க வழியில்லாமல் அவர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளது தமிழக அரசின் எல்காட் நிறுவனம்.

 

 Aadhar closing ceremony ..? Staff in the middle street...!!!


 

தகவல் தொழில் நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய நந்தன் நீல்கேனியின் தலைமையில் 2009 பிப்ரவரி மாதம் இந்தியாவில் துவக்கப்பட்ட திட்டமே தனிமனித அடையாளத்தை உள்ளடக்கிய "ஆதார்" திட்டம். இந்த 12 இலக்க அடையாள அட்டையில் கண்ணின் விழித்திரை, கைரேகை போன்ற உயிரியளவுகளும் மனிதனின் தனிப்பட்ட சுயவிவரக் குறிப்புகளும் அடங்கியிருக்கும். நாட்டில் அனைவருக்கும் ஆதார் அட்டை அவசியம் என அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் 2011ம் ஆண்டு வெற்றிகரமாக இதனை எல்காட் நிறுவனம் இயக்கியது.

 

 

இதற்கென தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 500 ஆதார் மையங்களை திறந்த எல்காட் நிறுவனம் மையங்களுக்கென சொற்ப தொகையினை சம்பளமாக தந்து கணிணி ஆப்ரேட்டர்களையும் பணிக்கு அமர்த்தியது. ஆனால் பணியாளர்களுக்கான சம்பளத்தை தந்தது சென்னை மடிப்பாக்கம் சீனிவாச நகரிலுள்ள நியூ லைப் பிளேஸ்மெண்ட் நிறுவனம். கடந்த எட்டு வருடங்களாக ஆதார் மைய கணிணி ஆப்ரேட்டர்கள் பணியாற்றி வந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பின்றி கடந்த புதன்கிழமை முதல் ஏறக்குறைய 376 ஆப்ரேட்டர்களின் ஐ.டி.யை பிளாக் செய்து, அவர்களை வீட்டிற்கு அனுப்பி வருகின்றது எல்காட் நிறுவனம். இதனால் ஊழியர்கள் நடுத்தெருவில் நிற்பது ஒருபுறம் எனினும், ஆதார் மையங்களில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 Aadhar closing ceremony ..? Staff in the middle street...!!!



 
"ஆதாரை முழுவதுமாக மூடப்போகிறார்களா என்பது தெரியவில்லை..! காலை எட்டு மணி துவங்கி இரவு எட்டு மணி வரை பணியாற்றி வந்தாலும் மாதம் ரூ.7645 மட்டுமே சம்பளம் வழங்கி வந்தனர். இந்நிலையில் எங்களுக்கு சம்பள உயர்வு வேண்டுமென நாங்கள் ஒட்டுமொத்தமாக கோரிக்கை வைக்க, திருச்சி, சேலம், கோவை மற்றும் மதுரையில் பல கட்டமாக ஆப்ரேட்டர்களுக்கான சந்திப்பை நடத்தியவர்கள் இந்த ஜூனில் சம்பள உயர்வு தருவதாக வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. திடுமென 376 நபர்களின் ஐ.டி.யையும் பிளாக் செய்து விட்டனர். இப்போதைக்கு நாங்கள் வேலையில் இருக்கிறோமோ.? இல்லையோ.? என்பதும் தெரியவில்லை. இதனை நம்பிய நாங்கள் நடுத்தெருவில் நிற்கின்றோம். அரசு தான் இதற்கு விளக்கமளிக்க வேண்டும்" என்கின்றனர் பணியிலிருந்து ஐ.டி.பிளாக் செய்யப்பட்ட ஊழியர்கள்.

 
ஆதாரும், ஆதார் மைய ஊழியர்களும் உண்டா.? இல்லையா.? என்பதனை அரசு தான் அறிவிக்க வேண்டும்..!