மத்திய அரசின்வேளாண்சட்டங்களுக்கு எதிராகவிவசாயிகள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தன்றுட்ராக்டர்பேரணி நடத்திய அவர்கள், அதன்பிறகு சாலைமறியலிலும், ரயில் மறியலிலும் ஈடுபட்டனர். மேலும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாதவரை, போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்ற முடிவில்விவசாயிகள் உறுதியாகவுள்ளனர்.
இந்தநிலையில், பாரதியகிசான்யூனியன் என்ற விவசாயஅமைப்பின் தலைவர், பாஜக தலைவர்களுக்கு தங்கள் அமைப்பில்உள்ள விவசாயிகள் யாரும்விழாக்களுக்கு அழைப்பிதழ் அனுப்பக்கூடாது எனஉத்தரவிட்டுள்ளார். அதை மீறினால்வினோதமான ஒரு தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாரதியகிசான்யூனியன் தலைவர் நரேஷ்திகைத், "இதைஉத்தரவாகவோ, அறிவுரையாகவோ எடுத்துக் கொள்ளுங்கள். யாரும்பாஜகதலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பக்கூடாது. அப்படி அனுப்புபவர், அடுத்த நாள் 100 பேருக்குஉணவை அனுப்ப வேண்டும்" எனவிவசாயிகளிடையே உரையாற்றும்போது தெரிவித்தார். மேலும் செய்தியாளர்களிடம் அவர் இதுகுறித்து,அவர்களிடம் (பாஜக தலைவர்கள்) யாராவது தவறாக நடந்துகொண்டால், அவர்கள் பாரதிய கிசான் யூனியனையும் எங்களையும் குற்றம் சாட்டுவார்கள். எனவே அவர்கள் தங்கள் வீடுகளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனநான் இதைக் கூறினேன். வேண்டுமானால் நீங்கள் இதைப் புறக்கணிப்பாகக் கருதலாம்" எனக் கூறியுள்ளார்.