Skip to main content

”குரங்குகளை கண்டு ஓடவேண்டாம்”- எம்பிகளுக்கு நாடாளுமன்ற சுற்றரிக்கை

Published on 13/11/2018 | Edited on 13/11/2018
monkeys


இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக உலவி வருகிறது. மேலும், குரங்குகளின் தொல்லை அதிகரித்துவிட்டதாக உறுப்பினர்கள் நாடாளுமன்ற செயலகத்தில் புகார் அளித்து உள்ளனர். இந்த புகார்களை தொடர்ந்து செயலகம் ஒரு சுற்றரிக்கை ஒன்றை அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பியுள்ளது. அதில் குரங்குகளின் கண்களை நேருக்கு நேர் பார்க்க வேண்டாம், அதை தவிர்ப்பது நல்லது. குரங்குகளை கண்டதும் அச்சத்தில் ஓட வேண்டாம். அதன் மீது இரு சக்கர வாகனங்களை விட்டுவிட்டால், அந்த இடத்தை விட்டு உடனடியாக அகன்று விடுங்கள். குரங்குகளை எந்த வகையிலும் வெறுப்பேற்றும் செயல்களில் ஈடுபட வேண்டாம். குரங்குகளை தனித்து இருக்க விடுங்கள், அப்போதுதான் அவை உங்களை தொந்தரவு செய்யாது. அவற்றை பொருட்படுத்தாமல் அமைதியாக கடந்து செல்லுங்கள் என்று அந்த சுற்றரிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா; புறக்கணிக்கும் திமுக

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

Inauguration of New Parliament Building; DMK ignores

 

புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

 

தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.

 

கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28-ம் தேதி சவார்க்கர் பிறந்த நாளன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" எனப் பதிவிட்டிருந்தார். நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்குப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்க இருப்பதாக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திறப்பு விழாவை புறக்கணிக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் திமுகவும் நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.