Advertisment

“என்னை மோடிஜி என்று அழைக்க வேண்டாம்” - பிரதமர் மோடி

publive-image

என்னை மோடிஜி என்று அழைக்க வேண்டாம் எனப்பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisment

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 22 ஆம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் இந்த கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் பாஜக நாடாளுமன்ற குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “என்னை மோடிஜி என்று அழைக்க வேண்டாம். மோடி என்று அழைத்தால் போதும். மோடிஜி எனக்கூறி என்னை மக்களிடமிருந்து தள்ளிவைத்துவிட வேண்டாம். பொதுமக்கள் என்னை மோடி என்றே அறிவர். மக்களும் அப்படியே நேசிக்கின்றனர். இந்த வெற்றி என் தனிப்பட்ட வெற்றியல்ல. யாரையும் இதில் தனிப்பட்டு பாராட்ட வேண்டியதுமில்லை. இது ஆயிரக்கணக்கானோரின் உழைப்பால் கிடைத்த வெற்றி. நம்மோடு இன்று இருப்பவர்கள், இல்லாதவர்கள் என அனைவரும் பாஜகவுக்கு பல வருடம் சேவை செய்துள்ளனர். எனவே என்றும் அவர்கள் நம்மோடு இருப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe