Advertisment

'டென்ஷன் ஆகாதீர்கள்;பிரார்த்தனை செய்யுங்கள்''-சோனு சூட் ட்வீட்!

'Don't be tense; pray' '- Sonu Suite Tweet!

நான்கு கைகள் நான்கு கால்களுடன் பிறந்த குழந்தையின் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலான நிலையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய நடிகர் சோனு சூட் முன்வந்துள்ளார்.

Advertisment

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் ஒரு ஏழை குடும்பம் ஒன்றில் இரண்டரை வயது சிறுமி ஒருவர் பிறக்கும் பொழுதே நான்கு கைகள் நான்கு கால்களுடன் பிறந்துள்ளார்.அறுவை சிகிச்சை மூலமே அவற்றை அகற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் வறுமை காரணத்தால் அறுவை சிகிச்சை செய்வதற்கான பணம் இல்லாமல்சிறுமியின் குடும்பத்தினர் தவித்து வந்தனர். இந்நிலையில் அச்சிறுமியின் வீடியோவை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து உதவி செய்ய முன்வந்துள்ளார். சிறுமியுடைய வயிற்றில் கூடுதலாக உள்ள கைகள் மற்றும் கால்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றத் தேவையான பரிசோதனையை மருத்துவர்கள் செய்யும் புகைப்படத்தையும், வீடியோவையும் ட்வீட் செய்துள்ள சோனு ''டென்ஷன் ஆகாதீர்கள் சிகிச்சை தொடங்கிவிட்டது. பிரார்த்தனை செய்யுங்கள்'' என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கரோனா நேரங்களில் பல்வேறு உதவிகளை செய்ததன் மூலம் மேலும் பிரபலமானவர் சோனு சூட் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

humanist
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe