Skip to main content

'டென்ஷன் ஆகாதீர்கள்;பிரார்த்தனை செய்யுங்கள்''-சோனு சூட் ட்வீட்!

Published on 29/05/2022 | Edited on 29/05/2022

 

'Don't be tense; pray' '- Sonu Suite Tweet!

 

நான்கு கைகள் நான்கு கால்களுடன் பிறந்த குழந்தையின் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலான நிலையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய நடிகர் சோனு சூட் முன்வந்துள்ளார்.

 

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் ஒரு ஏழை குடும்பம் ஒன்றில் இரண்டரை வயது சிறுமி ஒருவர் பிறக்கும் பொழுதே நான்கு கைகள் நான்கு கால்களுடன் பிறந்துள்ளார்.அறுவை சிகிச்சை மூலமே அவற்றை அகற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் வறுமை காரணத்தால் அறுவை சிகிச்சை செய்வதற்கான பணம் இல்லாமல் சிறுமியின் குடும்பத்தினர் தவித்து வந்தனர். இந்நிலையில் அச்சிறுமியின் வீடியோவை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து உதவி செய்ய முன்வந்துள்ளார். சிறுமியுடைய வயிற்றில் கூடுதலாக உள்ள கைகள் மற்றும் கால்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றத் தேவையான பரிசோதனையை மருத்துவர்கள் செய்யும் புகைப்படத்தையும், வீடியோவையும் ட்வீட் செய்துள்ள சோனு ''டென்ஷன் ஆகாதீர்கள் சிகிச்சை தொடங்கிவிட்டது. பிரார்த்தனை செய்யுங்கள்'' என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கரோனா நேரங்களில் பல்வேறு உதவிகளை செய்ததன் மூலம் மேலும் பிரபலமானவர் சோனு சூட் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தகராறில் குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோர்; ஆதரவளித்து விளையாண்ட 10 வயது சிறுவனின் நெகிழ்ச்சி செயல்

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

A parent who leaves a child on the street; A resilient act of a 10-year-old boy who played with support

 

சேலத்தில் குடும்ப தகராறில் குழந்தையை பெற்றவர்களே தெருவில் விட்டு சென்ற நிலையில், சிறுவன் ஒருவன் குழந்தைக்கு ஆதரவளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

சேலத்தில் டூ வீலர் மெக்கானிக் வேலை செய்து வரும் ஒருவர், மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக தங்களுடைய மூன்று வயது குழந்தையை கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள ஒரு தெருவில் விட்டுவிட்டு சென்று விட்டார். ஆதரவின்றி அந்த குழந்தை சுற்றித் திரிந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த கோகுல் என்ற பத்து வயது சிறுவன் ஆதரவளித்து குழந்தையுடன் விளையாடி வந்தான்.

 

ஆதரவற்ற குழந்தை ஒன்று சிறுவன் ஒருவனுடன் இருப்பது தெரிந்து, போலீசார் குழந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அந்த குழந்தை அச்சிறுவனை விட்டு பிரிய மறுத்து, அடம் பிடித்து அழுதது. இதனால் சிறுவன் கோகுலையும் சேர்த்து காவல் துறையினர் குழந்தையுடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு மனம் மாறி திரும்பவும் குழந்தையைத் தேடி வந்த பெற்றோரை எச்சரித்த போலீசார் 'உங்கள் பிரச்சனைக்காக இப்படியா குழந்தையை தெருவில் விட்டுவிட்டுப் போவது' என கடுமையாக எச்சரித்த பிறகு குழந்தையை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். குழந்தையை எடுத்து ஆதரவளித்து அதனுடன் விளையாண்ட சிறுவன் கோகுலுக்கு டிஎஸ்பி ரமேஷ் ஜாமென்ட்ரி பாக்ஸ் பரிசாக அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

 

Next Story

பசியோடு மனு கொடுக்க வந்தவரை பசியாற வைத்த காவல்துறை அதிகாரி

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

cuddalore police officer humanity incident

 

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பால்ராஜ் (80) என்பவர் அழுதபடியே இருந்துள்ளார். அப்போது கண்காணிப்பாளர்  ராஜாராம் ஏன் அழுகிறீர்கள்? எந்த ஊர்; என்ன விவரம் என்று பறிவோடு கேட்டுள்ளார். பெரியவர் பால்ராஜ் தனது சொந்த ஊர் ஆனைகுப்பம் எனக்கு ஒரு மகன் ஒரு மகன் உள்ளனர். அவர்கள் வயதான காலத்தில் எனக்கு சாப்பிட உதவி செய்வதில்லை. பணமும் கொடுப்பதில்லை என்று கூறி கண் கலங்கியுள்ளார்.

 

அதோடு அன்று காலை மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்க வெறும் வயிற்று பசியோடு வந்துள்ளார். இதை அறிந்து மனம் கலங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரியவர் பால்ராஜை அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே பெரியவரை அமர வைத்து தனது சொந்த செலவில் உணவுகளை வாங்கி கொடுத்து சாப்பிட வைத்தார். பெரியவர் பால்ராஜ் சாப்பிடும்போது எஸ்.பி எதிரில் அமர்ந்து கனிவுடன் அவரை பார்த்துக் ,கொண்டிருந்தார் கண்காணிப்பாளர்.

 

சாப்பிட்டு முடித்ததும் அவருக்கு ஆறுதல் கூறிய எஸ்.பி தங்கள் மனு மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்போது ராமாபுரத்தைச் சேர்ந்த 71 வயது ரங்கையைன் என்பவர் தனக்கு வரும் பென்ஷன் பணத்தை தனக்கு நெருங்கிய ஒருவர் வாங்கிக் கொண்டு தர மறுத்து மிரட்டி வருவதாக கூறியுள்ளார். அவரைப் பற்றி விசாரித்த எஸ்.பி ராஜாராம் ரங்கையனுக்கு டீ வாங்கிக் கொடுத்து அவர் புகாரை வாங்கி படித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அந்த இரு பெரியவர்களையும் அனுப்பி வைத்துள்ளார்.

 

காவல்துறை அதிகாரிகள் எப்போதும் மிடுக்காக காட்சியளிப்பார்கள். பேச்சிலும் ஒரு கராத்தன்மை இருக்கும். இதைத்தான் எங்கள் காலத்தில் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த அதிகாரி மிகவும் மென்மையாக பேசி எங்கள் குடும்பத்து பிள்ளைகளை போல எங்களிடம் அன்பு காட்டி, உணவு வாங்கிக் கொடுத்து, எங்கள் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியது மிகவும் தெம்பாக உள்ளது. எங்களைப் போன்ற வயதானவர்களுக்கு இவரைப் போன்ற மனிதாபமான மிக்க அதிகாரிகள் இன்னும் அதிக அளவில் உருவாகி உதவி புரிய வேண்டும் என்கிறார்கள் முதியவர்களான பால்ராஜ், ரங்கையன் ஆகியோர்.