Advertisment

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் உயர்வு!

lpg cylinder

Advertisment

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைப் போலவேசமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அந்தவகையில்இன்று (06.10.2021) வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 15 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 900 ரூபாயாகஇருந்த வீடுகளில் பயன்படுத்தப்படும்சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, தற்போது 915 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, கடந்த இரண்டு மாதங்களில் நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. இவ்வாறு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்துவருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

lpg cylinder PETROLEUM
இதையும் படியுங்கள்
Subscribe