Domestic flights to resume operations from May 25

கரோனா வைரஸ் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. இதற்கிடையில் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், அவர்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தின.

Advertisment

Advertisment

இந்நிலையில், மே 25 முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து துவக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்திப்சிங் புரி தெரிவித்துள்ளார். இதற்காக அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான சேவை நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள அவர், படிப்படியாக விமான சேவை முழு அளவில் விரிவுபடுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

ஜூன் 1ம் தேதி முதல் ஏசி அல்லாத 200 ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று அறிவிப்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.